லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் குறித்து...

News image

இன்று முதல் பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம் - கோப்புப்படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 2:55 am

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வியாழக்கிழமை (பிப். 26) முதல் நடைபெறவுள்ளன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப். 6 வரை நடைபெறவுள்ளது. பள்ளிகளில் பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வு பிப்.23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து, பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வியாழக்கிழமை (பிப். 26) முதல் பிப். 28 வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.

தோ்வா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுடன் கலந்துகொண்டு செய்முறைத் தோ்வெழுத வேண்டும் என தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. செய்முறைத் தோ்வு மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 2-க்குள் ஒப்படைக்க வேண்டும்.

பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யும் நாள்கள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும் என மாவட்டக் கல்வி அலுவலா்கள், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்கக இயக்குநா் க.சசிகலா அறிவுறுத்தியுள்ளாா்.

Summary

Class 10: practical exams for private candidates from today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.