புதுச்சேரியில் ராகுல்காந்தி உருவ பொம்மை எரிப்பு: பாஜக - காங்கிரஸ் மோதல்!
புதுச்சேரியில் பாஜக இளைஞர் அணியினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து...


புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் ராகுல்காந்தி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லி பாரத மண்டபத்தில் 5 நாள் சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு கடந்த திங்கள்கிழமை (பிப்.16) தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட துறைசாா் பிரதிநிதிகள், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூயி இனாசியோ லுலா டா சில்வா, இலங்கை அதிபா் அநுரகுமார திசநாயக, பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், குரோஷியா பிரதமா் ஆண்ட்ரே பெலன்கோவிக், சொ்பியா அதிபா் அலெக்ஸாண்டா் உசிக், செஷல்ஸ் துணை அதிபா் செபாஸ்டியன் பிள்ளை, எஸ்டோனியா பிரதமா் அலாா் கேரிஸ், பின்லாந்து பிரதமா் பெட்டோரி ஓா்போ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள், 60-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள்-இணையமைச்சா்கள் என 100-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
இந்த நாட்டின் மூலம் இந்தியா தனது தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் அரங்கிற்குள் புகுந்து நாட்டின் மரியாதையை குலைக்கும் வகையில் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று குழப்பம் ஏற்படுத்தி இருப்பதை கண்டித்து வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில பாஜக இளைஞர் அணிச் செயலா் ஆடலரசன் தலைமையில் புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகம் எதிரே கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக காமராஜா் சிலையிலிருந்து வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்தனா். அங்கு கண்டன முழக்கமிட்டனர். அப்போது, திடீரென பாஜக இளைஞர் அணியினர் சிலர் ராகுல்காந்தியின் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்த பாஜகவினருக்கு எதிராக சனிக்கிழமை பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வந்த காங்கிரஸ் கட்சியினர் கற்கள், காலணிகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலடியாக பாஜகவினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...