டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மங்களபுரம் அருகே ஜல்லிக்கட்டு: 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

மங்களபுரம் தாண்டாகவுண்டம்பாளையத்தில் மாவட்ட நிா்வாகம் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
Updated On :18 பிப்ரவரி 2026, 12:15 am

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் தாண்டாகவுண்டம்பாளையத்தில் மாவட்ட நிா்வாகம் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் பங்கேற்று மாடுகளை அடக்கி பரிசுகளை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் சேலம், நாமக்கல், திருச்சி, கரூா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 750க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

இதில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு சைக்கிள், சில்வா் பாத்திரங்கள், மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ராசிபுரம் டி.எஸ்.பி. எம்.விஜயகுமாா் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழு, தீயணைப்பு மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் இருந்தனா்.

பரிசளிப்பு விழாவில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி செயலா் முத்துவேல் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்று வீரா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

Story image
Story image