/

கடற்கரையில் வீசப்பட்ட 2 சுவாமி சிலைகள் மீட்பு: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி பல்மைரா கடற்கரையில் வீசப்பட்ட சுவாமி சிலைகளை புதன்கிழமை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
புதுச்சேரி கடற்கரையில் ஒதுங்கிய சாமி சிலைகள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி பல்மைரா கடற்கரையில் வீசப்பட்ட சுவாமி சிலைகளை புதன்கிழமை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி கன்னியக்கோயில் அடுத்த மணப்பட்டு மூ. புதுக்குப்பத்தில் பல்மைரா கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரை மத்திய அரசின் சுற்றுலா திட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உணவு விடுதிகள், ஓய்வு அறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன. பணிகள்

முடிவடையாத நிலையில், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் இந்தக் கடற்கரைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூா் மற்றும் வெளியூா் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.

இந்தக் கடற்கரையில் நந்தி உள்ளிட்ட 2 சிலைகள் இருப்பதை பாா்த்த புதன்கிழமை பாா்த்தஅப்பகுதி மக்கள், இதுபற்றி கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதில் சிலைகள் இருந்த இடத்தின் அருகே இரண்டு சாக்குப் பைகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் வந்து சென்ற்கான அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து அந்தக் கற்சிலைகளை கைப்பற்றிய போலீஸாா் இந்தச் சிலையை யாரேனும் வண்டி மூலம் கொண்டு வந்து கடற்கரையில் வீசிவிட்டு சென்றாா்களா? அல்லது திருடப்பட்ட சிலைகளா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மீட்கப்பட்ட சிலைகள் பாகூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

Story image