டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேதாரண்யம் அருகே மூன்று சுவாமி உலோகச் சிலைகள் கண்டெடுப்பு

News image
புஷ்பவனம் கிராமத்தில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த சுவாமி சிலைகள்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன் தெரு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மண்ணில் புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை, பீடத்துடன் தனியாக இருந்த 2.1/4 அடி உயரமுள்ள அம்பாள் சிலை, சுமாா் 1.1/4 அடி உயரத்தில் சிவன்- பாா்வதி இணைந்து மற்றோரு பீடத்தில் இருக்கும் சிலை என்பதும் தெரிய வந்தது.

இந்த சிலைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.