மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது குறித்து...

News image

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பட்டாபிஷேக விழா - டிஎன்எஸ்

Updated On :4 ஏப்ரல் 2026, 4:51 am

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபாட்டனர்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, நாள்தோறும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபாட்டனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபாட்டனர். - டிஎன்எஸ்

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் கோயிலில் அமைந்துள்ள திருவாச்சி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது

விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய முருகபெருமானுக்கு நவரத்தினங்களுடன் கூடிய கிரீடம் மற்றும் செங்கோல் வழங்கி வேதமந்திரங்களோடு, மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

முருகபெருமான் பட்டாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா கோஷம் முழங்கிட முருகனை வழிபட்டனர்.

தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (ஏப். 4) திருக்கல்யாணமும், நாளை மறுநாள் (ஏப்.5) திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழு மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

Summary

Pattabhishekam at Thiruparankundram Murugan Temple: Large Crowds of Devotees Participate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.