சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை திணிப்பை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், அதன் என்டிஏ கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றனரா? அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா? என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.
“இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்” என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான என்டிஏ அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. “மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும்.
தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது.
இந்த முரண் வெளிப்படையானது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத - தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம்!
ஆசிரியர்களின் எண்ணிக்கை, போதிய பயிற்சிக்கான திறன் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை குறித்த உண்மைக் களநிலவரத்தை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? கல்வித் துறையில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் இந்த நகர்வுக்கான நிதி ஆதாரம் எங்குள்ளது? எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே இது தோன்றுகிறது.
இது மொழி குறித்த கேள்வி மட்டுமல்ல; நியாயம், கூட்டாட்சி மற்றும் சமவாய்ப்புகள் குறித்த கேள்விகளுமாகும். இந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும்.
முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில், நம் குழந்தைகள் எதிர்காலத்திற்காகத் தயாராக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன் - விஷுவல் எஃபக்ட்ஸ் - கேமிங் - காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களது திறனை மேம்படுத்தி, அவர்களது அறிவியல் பார்வையையும் திறனாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். மாறாக, இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமை அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதாக உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான - ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தியைத் திணிப்பதில் மத்திய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது. இந்தச் செயல், கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயல்.
இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும். நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவையாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், அதன் என்டிஏ கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா? அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா?
மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்.
Does the Thiru Palaniswami-led AIADMK and its NDA allies in Tamil Nadu subscribe to this imposition? Or will they, for once, stand up for the rights, identity, and future of our students?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
உதயநிதியை முதல்வராக்க விரும்புகிறார் மு.க. ஸ்டாலின்: அமித் ஷா

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினாரா ஸ்டாலின்? மீஞ்சூர் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!

தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜ. கூட்டணி : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



