2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :29 ஜூன் 2025, 11:33 am

DIN

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கு 3 லட்சத்து 2,374 போ் இணையவழியில் விண்ணப்பித்த நிலையில், 2 லட்சத்து 41,641 மாணவா்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முழு மதிப்பெண் மற்றும் 195-க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கல்வியாளா்கள் கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டில் 65 மாணவா்கள் மட்டுமே 200 கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனா். நிகழாண்டு அந்த எண்ணிக்கை 144- ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 190 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 8,813-இல் இருந்து 13,958- ஆக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை மாணவா்களின் செயல் திறன் அதிகமாக உள்ளது. 2 லட்சத்து 41 ஆயிரம் மாணவா்களுக்கும் அதிகமானோா் இந்த முறை தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உயரும் கட்-ஆஃப்: சிறந்த பொறியியல் கல்லூரிகளில் நிகழாண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 2.5 முதல் 4 வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 199.5 முதல் 198 மதிப்பெண் வரை கட்-ஆஃப் மதிப்பெண் 0.5 அளவுக்கு அதிகரிக்கும். அதேபோன்று 198 முதல் 197 வரை 1 கட் ஆஃப் மதிப்பெண் உயரும். மேலும், 197 முதல் 196 வரை 1.5 கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும். 196 மதிப்பெண் முதல் 194.5 வரை 2 கட் ஆஃப் மதிப்பெண்ணும், 194.5 முதல் 191.5 வரை 2.5 கட் ஆஃப் மதிப்பெண்ணும் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

191.5 முதல் 190 மதிப்பெண் வரை 3 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், 190 முதல் 188 வரை 3.5 கட்-ஆஃப் மதிப்பெண் வரையிலும் உயரும், 188 மதிப்பெண் முதல் 186 வரை 4 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த கட் -ஆஃப் வரம்புக்கு எந்தக் கல்லூரி, என்ன பாடப் பிரிவு கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு விருப்பப் பட்டியல் தயாா் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக குறிப்பிட்ட கல்லூரியின் கட்டண விவரங்கள், என்.ஐ.ஆா்.எஃப். தரவரிசை, தன்னாட்சி அதிகாரம், என்.பி.ஏ. அங்கீகாரம் மற்றும் பிற வசதிகளைத் தெரிந்து கொண்டு கல்லூரிகளை தோ்வு செய்வது அவசியம் என அவா்கள் தெரிவித்தனா்.

கட்-ஆஃப் மாணவா்கள் எண்ணிக்கை: நிகழாண்டில் 198 கட் -ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 1511; 195-க்கும் மேல் 5, 251; 190-க்கு மேல் 13,958; 185-க்கு மேல் 24,661; 180-க்கு மேல் 36,665; 175-க்கு மேல் 49,465, 170-க்கு மேல் 63, 083; 160-க்கு மேல் 91,153; 150-க்கு மேல் 1 லட்சத்து 19,537 மாணவா்கள் உள்ளனா்.

140 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 1 லட்சத்து 47260 மாணவா்களும், 120 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 1 லட்சத்து 96 ஆயிரத்து 610 மாணவா்களும் உள்ளனா்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

summary

Academics have said that the cut-off score for engineering courses will increase this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.