தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

திருத்தேரோட்டம் முதல் தீர்த்தவாரி வரை நடைபெறும் கோயில்களின் விவரங்கள்..

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 9:42 am
  • ஸ்ரீ்அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினர் சார்பில் ஏப்ரல் 26 அன்று ஆரணிக்கும், ஆற்காடுக்கும் இடையில் உள்ள கே. கே. தோப்பு யோகலிங்கேஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி நடைபெறுகிறது.

  • தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், தண்டுபத்து அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் சித்திரை கொடைவிழா ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) முதல் ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

  • ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் எனும் திருவூறல் அருள்மிகு கிரிராஜகன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) காலை 9 } 10 மணிக்குள் ரத உற்சவம் நடைபெறுகிறது.

  • செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள வல்லிபுரம் ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா ஸமேத

  • ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ஏப்ரல் 28}ஆம் தேதி வார்ஷிக உற்சவம் நடைபெறுகிறது.

  • கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பரிக்கல் அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 29 முதல் மே 10 வரை பல்வேறு உற்சவங்களுடன் நடைபெறுகிறது.

  • தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் கிராமத்தில் 381}ஆவது ஆண்டு, ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி திருவிழாவில் ஏப்ரல் 28 திவ்யநாமம், டோலோத்ஸவம், ஏப்ரல் 29 ராதா கல்யாணம், ஏப்ரல் 30 மாலை 6 மணிக்கு நரசிம்ம சுவாமி பிராணப் பிரதிஷ்டை, இரவு 7 மணிக்கு ஸ்ரீநிவாஸப்பெருமாள் கருடசேவை, இரவு 10 மணிக்கு பிரகலாத சரித்திரம் நடைபெறுகிறது.

  • திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோவில்பட்டி கதிர் நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஹோமம் நடைபெறுகிறது.

  • கரூரில் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் ஏப்ரல் 30 காலை 7.35 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற உள்ளது.

  • புதுக்கோட்டை, ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவத ஸ்வாமிநாம ஸங்கீர்த்தன மண்டபம் 107-ஆவது ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம் ஏப்ரல் 30 முதல் மே 4 வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 30 மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மூர்த்தி பிராணபிரதிஷ்டை வைபவம். மே 2 காலை 10 மணிக்கு ஸ்ரீ சீதாகல்யாண மகோத்சவம்.

  • ஸ்திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக மே 3 கருடசேவை, மே 5 நாச்சியார் திருக்கோலம், மே 7 திருத்தேர்,

    மே 9 தீர்த்தவாரி, மே 10 சப்தாவர்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.