மயிலாடுதுறை: நீடூரில் மர்மநபர்களால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்த நிலையில், தப்பியோடிய இரண்டு பேரை போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை தாலுகா நீடூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). சமையலரான இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீடூரில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர் இறங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது ஹாலிக்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், முகம் மற்றும் கையில் பலத்த காயமடைந்த முகமது ஹாலிக்கை பொதுமக்கள் மீட்டு அவசர ஊர்தியில் ஏற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
முகமது ஹாலிக்கை மர்மநபர் கத்தியால் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவினை ஆதாரமாகக் கொண்டு மர்மநபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது ஹாலிக் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், குற்றவாளியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!

விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து 800 காவலர்கள் தீவிர பாதுகாப்பு!

மயிலாடுதுறை: பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


