/

எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் காலமானார்!

எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மறைவு தொடர்பாக...

News image
எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன்
Updated On :10 நவம்பர் 2024, 9:11 am

DIN

பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் (66), மதுரையில் இன்று(நவ. 10) காலமானார்.

இந்திரா சௌந்தரராஜன் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்திரா சௌந்தரராஜன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் திரைப்படங்களாகவும், சின்னத் திரை தொடர்களாகவும் வெளியாகியுள்ளன. மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற புகழ்பெற்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

அனந்தபுரத்து வீடு, சிருங்காரம் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய என் பெயர் ரங்கநாயகி எனும் நாவலுக்கு 1999-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் 3ஆம் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.