

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக் குறைவால் புணேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொண்டை தொடர்பான பிரச்னைகள், இருமல், காய்ச்சல் நீண்ட நாள்களாக இருந்துவந்த நிலையில் இன்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சரத் பவார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக புணேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சரத் பவார் உடல்நலம் குறித்து யாரும் பயப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவரது மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாமென்று கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற அவரது சடங்குகளில் சரத் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
summary
Nationalist Congress Party leader Sharad Pawar has been admitted to a hospital in Pune due to ill health.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் சரத் பவார்!

புணே மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் இணைகிறதா? பாஜகவுடன் கூட்டணி தொடருமா? சரத் பவார் பேட்டி!

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


