எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிதம்பரத்தில் பல்கலைக்கழக போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: இருவர் கைது

சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த தீட்சிதர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

News image
சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட சங்கர் தீட்சிதர், நாகப்பன்.
Updated On :19 ஜூன் 2024, 5:05 am

Venkatesan

சிதம்பரம்: சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த தீட்சிதர் உள்ளிட்ட இருவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சரகம் மீதிகுடி - கோவிலாம் பூண்டி இடையே சாலையோரம் பள்ளி , கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்கள் மூட்டையாக கிடந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையில் காவல் துறையினர் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர் தீட்சிதர் (37), மீதிகுடியைச் சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன் (48) ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.