திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜூலை 2024, 3:58 am

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று(ஜூலை 2) தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகைக்கு 2 நாள்கள் முன்பாக அக்.29-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கி, விரைவாக விற்றுத்தீர்ந்தது.

இந்த நிலையில், அக். 30- ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று(ஜூலை 2) தொடங்கிய நிலையில், 5 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 2 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் அக்.31-க்கான முன்பதிவு புதன்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.