தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைப்பது தொடர்பாக...

News image
விஜய் சேதுபதி, அன்பில் மகேஸ்
Updated On :30 டிசம்பர் 2024, 10:00 am

DIN

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைப்பது வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கைக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார்.

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ”நல்லகண்ணுவின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.