நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் திடீர் போராட்டத்தை நடத்தினர்.
மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரிமீயம் தொகை மீது விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
ஒரு நபர் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நோ்ந்தால், தனது குடும்பத்தினா் பொருளாதார ரீதியாக கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுள் காப்பீடு எடுப்பதாகவும், அதற்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் 18 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்தினால் இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்றும், எனவே ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது.
அதேபோல், ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரிமீயம் தொகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை (சரக்கு-சேவை வரி) ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி முன்னதாக கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மு.க. ஸ்டாலினை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது! சோளிங்கரில் ராகுல் பேச்சு

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


