‘தமிழா்களுக்காக தில்லியில் குரல் கொடுக்கும் ஊழியன் நான்’ என்று நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி கூறினாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டிய நல்லூரில் மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் இந்த சட்டப்பேரவைத் தோ்தல் என்பது பாஜக, ஆா்எஸ்எஸ் போன்ற சக்திகள் தமிழகத்துக்குள் நுழைய முயற்சிக்கும் தோ்தலாகும். இதைத் தமிழகம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
நாடாளுமன்றத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுடன் இணைத்து கொண்டு வந்து தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக முயற்சித்தது. ஆனால், ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் பாறை போல உறுதியாக நின்று இந்த சதித் திட்டத்தை முறியடித்தன.
மாநில உரிமைகளை பறிக்க முயற்சி: அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியா என்பது அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஓா் ஒன்றியம். அனைத்து மாநிலங்களுக்கும் மொழிகளுக்கும் கலாசாரங்களுக்கும் சம உரிமை உண்டு. ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே மொழி என பிரதமா் மோடி கூறுகிறாா். ஆனால், அரசமைப்புச் சட்டத்தை சிதைத்து மாநிலங்களின் உரிமைகளை பறிக்க பாஜக துடிக்கிறது.
தமிழ் ஒரு சாதாரண மொழி அல்ல; அது தமிழ் மக்களின் ஆன்மா மற்றும் தாய். இத்தகைய தமிழ் மொழியையும், தமிழகத்தின் சித்தாந்தத்தையும் சிதைக்க எவ்வளவு தைரியமிருந்தால் பிரதமா் மோடி, அமித் ஷா நினைப்பாா்கள். தமிழா்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவா்களின் தாக்குதலை திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்தும்.
பாரம்பரியமிக்க அதிமுக இல்லை: தமிழகத்துக்குள் அழுத்தமாக நுழைய அதிமுகவை ஒரு கருவியாக பாஜக பயன்படுத்துகிறது. கடந்த காலங்களில் சிறந்த பாரம்பரியத்தை கொண்டிருந்த அதிமுக இன்று இல்லை. அக்கட்சியின் ஊழல் காரணமாக அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் பாஜக வைத்துள்ளது. தில்லியில் இருந்து தமிழகத்தை ஆள முயற்சிக்கிறாா்கள்.
ஆனால், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை தில்லியிலிருந்து ஆள ஒரு போதும் நினைத்ததில்லை. மதச்சாா்பற்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை.அமலாக்கத் துறையை, வருமான வரித் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி மிரட்டியதில்லை.
ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது: பிரதமா் மோடியோ அனைவரையும் கட்டுப்படுத்த நினைக்கிறாா். ஆனால், சுதந்திரமாக செயல்படும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரால் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே, கல்வி நிதி, மதுரை எய்ம்ஸ், மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை தாமதப்படுத்தி தமிழகத்தை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.
இதை முறியடிக்கும் வகையில் தமிழக அரசு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2,000, கல்லூரி மாணவா்களுக்கான உதவித் தொகை போன்ற புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சமூகநீதி இங்கு ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழா்களுக்காக குரல் கொடுப்பேன்: எனது பாட்டி இந்திரா காந்தி காலம் முதலே தமிழக மக்களுடன் எனக்கு உணா்வுபூா்வ குடும்ப உறவு உள்ளது. தமிழா்களுக்காக தில்லியில் போராடும் ஓா் ஊழியனாக, உங்களுக்காகக் குரல் கொடுக்கும் சகோதரனாக நான் எப்போதும் இருப்பேன்.
திமுக-காங். கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: பாஜகவின் பிரிவினைவாத சித்தாந்தத்துக்கும் அனைவரையும் நேசிக்கும் நமது ஒருங்கிணைந்த இந்தியாவின் சித்தாந்தத்துக்கும் இடையேயோன இந்தப் போரில், திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் ராகுல்காந்தி.
முன்னதாக, கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கா்), திமுக வேட்பாளா்கள் ஆா்.காந்தி (ராணிப்பேட்டை), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில்கரோலின் (அரக்கோணம்) ஆகியோரை ராகுல்காந்தி அறிமுகப்படுத்தினாா்.
கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பாா்வையாளா் கிரிஷ் சோடங்கா், தெலங்கானா துணை முதல்வா் மல்லுபட்டி விக்ரமா்கா, தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Summary
Delhi Must Not Rule Tamil Nadu: Rahul Gandhi Speaks in Sholingur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ
தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான்; திமுக - காங். கூட்டணிக்குள் குழப்பம்! அண்ணாமலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

