பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: தடுப்பூசி போட வந்தவர்களும் காமராஜர் உருவப் படத்துக்கு மரியாதை
சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


சீர்காழி: சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தடுப்பூசி போட வந்தவர்களும் காமராஜர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது.
காமராஜர் திருவுருவப்படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் வரதராஜன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்ததால் முகாமில் பங்கேற்ற திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்களும் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று காமராஜர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...