ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சங்ககிரியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய  பேருந்து நிலையம் அருகே  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

News image
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் சேலம் மேற்கு மாவட்டத்தலைவர்  சி. எஸ். ஜெய்க்குமார்.
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

DIN

சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய  பேருந்து நிலையம் அருகே  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட  தலைவர்  சி.எஸ்.ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 

சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர்  கே ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். 

முன்னாள் மாவட்ட பொதுச்செயலர்கள் பிபி.சுப்பிரமணியன், செங்கோட்டுவேல், முன்னாள் மாநில துணை செயலாளர் நடராஜ், முன்னாள் நகரத்தலைவர் காசிலிங்கம், நகரச்செயலர் எ.ரவி, நிர்வாகிகள் கரும்பாயிரம், அங்கமுத்து, லோகநாதன், சின்னுசாமி, செல்வம், ஆறுமுகம், ஜெகநாதன், கருப்பண்ணன்,குமார், சரவணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாதன், கார்த்தி, நவீன்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.