டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வண்ணாத்திக்குட்டை வள்ளலார் தருமச்சாலையில் மழை வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வண்ணாத்திக்குட்டை வள்ளலார் கருணைக்கரங்கள் தருமச்சாலையில், மழை வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வண்ணாத்திக்குட்டை வள்ளலார் கருணைக்கரங்கள் தருமச்சாலையில், மழை வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதரவற்றோர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, இருப்பிடம் தேடிச் சென்று அன்னதான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

வாழப்பாடி அடுத்த மேற்குராஜபாளையம் ஊராட்சி, வண்ணாத்திக்குட்டை அக்ஷயா பள்ளி வளாகத்தில், வள்ளலார் கருணைக்கரங்கள் தருமச்சாலை இயங்கி வருகின்றது. 

மாதந்தோறும் பூசம் தினத்தில், அணையாதீபம் ஏற்றி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூசம் தின பூஜையில்,  மழை வேண்டி, அணையா தீபமேற்றி பக்தர்கள்  வழிபாடு செய்தனர்.

வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமன்றி, சுற்றுப்புற கிராமத்திலுள்ள ஆதரவற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, இருப்பிடம் தேடிச் சென்று  அன்னதான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் அன்னதான பொட்டலங்கள் வினியோகிக்கும் பணிகளை, கருணைக்கரங்கள் தொண்டு நிறுவன நிர்வாகி சோமம்பட்டி சிவா, ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், விஐய், செல்வி, அருணாசலம், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.