பாராளுமன்ற வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) நிகழ்வின் போது மாநில நிதித்துறை அமைச்சரான அனுராக் தாக்கூர், மதுரா தொகுதி எம் பியும் நடிகையுமான ஹேமாமாலினி உள்ளிட்ட மற்றும் சில எம் பிக்கள் கையில் துடைப்பத்துடன் பாராளுமன்ற வளாகத்தை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வது போன்ற விடியோ ஒன்று வெளியானது. இந்த விடியோவில் நடிகையும் மதுரா எம் பியுமான ஹேமாமாலினியின் செயல் தற்போது நெட்டிஸன்களிடையே பலத்த கண்டனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. அவர் அந்த நிகழ்வில் துடைப்பம் பிடிக்கத் தெரியாதவர் போல நடந்து கொண்டார். உடனிருக்கும் ஆண் எம் பிக்கள் படு விரைவாக துடைப்பத்தால் பெருக்கி தூள் கிளப்பிக் கொண்டிருக்க ஹேமாவோ கையிலிருக்கும் துடைப்பத்தை ஹாரிபாட்டரின் மேஜிக் ப்ரூம் போல பிடித்துக் கொண்டு அவர்களைப் பார்த்து துடைப்பம் போடக் கற்றுக்கொள்ளும் மாணவி போல நின்று கொண்டிருந்தார்.