இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நேரத்தில் தனக்கேற்பட்ட இந்த மோசமான விபத்தைப் பற்றிப் பேசுகையில் குவாண்டன் ஜெரிமி கூறியது; நாங்கள் இருவரும் நேற்று தாஜ்மஹலைப் பார்த்து விட்டு இன்று ஃபதேபூர் சிக்ரிக்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அடையாளம் தெரியாத நால்வர் எங்களைப் பின் தொடர்ந்தனர். எங்களது அனுமதியில்லாமல் அவர்கள் என்னையும், எனது தோழியையும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். அறிமுகமில்லாத அந்த நால்வரும் எங்களை வீண் சண்டைக்கு இழுக்கப் பலவாறு முயன்றனர். அவற்றைப் பொருட்படுத்தாமல் நாங்கள் எங்கள் வழியில் நடந்து வந்து கொண்டிருந்த போது தான் திடீரென என்னைத் தாக்கத் தொடங்கினர். எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த எனது தோழி சத்தம் கேட்டு எனக்கு உதவ ஓடி வர, அதைத் தொடர்ந்து நால்வரும், தங்களிடமிருந்த ஸ்டிக் போன்ற ஆயுதத்தால் என்னைக் கடுமையாகவே தாக்கத் தொடங்கி விட்டனர். இதனால் என் தலை உடைந்து கடுமையான காயம் ஏற்பட்டதோடு, எனது செவிகளின் கேட்கும் திறனும் இப்போது பாதியாகக் குறைந்து விட்டது. என்று கூறி இருக்கிறார்.