இந்தத் தாக்குதல் தொடர்பாக சிறுமியின் சகோதரி சம்பந்தப்பட்ட இளைஞனின் தாயாரிடம் சென்று புகாரும் அளித்திருக்கிறாள். ஆனால், அதற்கு அந்தத் தாய் அளித்த பதிலோ; ‘யாரும் இன்னொஸண்ட் இல்லை’ என் மகனுக்கு அத்தனை கோபம் வரும் அளவுக்கு, உன் தங்கை என்ன செய்தாளோ?! என்பதாகவே இருந்திருக்கிறது. ஒரு தாயின் இத்தகைய பொறுப்பற்ற பதிலைக் கேட்டு நொந்து போன பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளிக்கவே; தற்போது அந்த இளைஞனின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 (கொடுமையான ஆயுதத்தால் வலியத் தாக்குதல்) பிரிவு 506( மிரட்டலுக்கான குற்றவியல் தண்டனைப் பிரிவு) எனும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. காவல்துறை வழக்குப் பதிந்தாலும் இந்த நிமிடம் வரை, தாக்கப்பட்ட சிறுமி, தாக்கிய இளைஞ யார் என்ற அடையாளம் வெளியாகவில்லை எனத்தெரிகிறது.