- என்றெல்லாம் நாம் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகளைக் கடுமையாக நிந்திக்கலாம். அவர்களை நிந்திப்பதில் தவறே இல்லை, ஆனால் அதற்கெல்லாம் முன்பு நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு; நம் வீட்டுக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமோ? என்பது தான் அது! ஒவ்வொரு பெற்றோரும் இந்தக் கேள்வியை தங்களுக்குள் பலமுறை கேட்டுப்பாருங்கள். கிடைக்கும் விடை உங்களுக்கே திருப்தியாக இருந்தால் சரி. இல்லையேல், இந்த விஷயத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கவனம் செலுத்தியே ஆக வேண்டியவர்களாவீர்கள்.