இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சில சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அந்த சட்ட விதிகளின் படி திருமணமாகி நீண்ட காலம் குழைந்தப் பேறு அடைய முடியாத தம்பதிகள் மட்டுமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இது தான் சட்ட விதி. ஆனால் கடந்த வாரம் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர். அவர் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் 2016 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட வாடகைத் தாய் மசோதாவின் படி, குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட தம்பதிகளுக்கும் வாடகைத் தாய் முறையில் குழந்தைகள் பெற அனுமதி இல்லை என்பதே விதி. ஆனால் இதற்குப் புறம்பாக இந்தி நடிகர் ஷாருக்கான் முன்னதாக தனக்கு மனைவி மூலமாக குழந்தைகள் இருந்த நிலையிலும், வாடகைத் தாய் மூலமாகவும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பாலிவுட்டில் பெருகி வரும் இந்த வாடகைத் தாய் கலாச்சாராத்தைப் பற்றி நாடாளுமன்றக் நிலைக் குழுவில் கண்டனம் தெரிவித்து சில அரசியல்வாதிகள் குற்றச்சாட்டை எழுப்பினர்.
இந்த வாடகைத் தாய் சர்ச்சையில் தற்போது விரும்பத் தக்க முன்னேற்றம் என்னவெனில், குறிப்பிட்ட இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகை முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சிங்கிள் பேரண்ட்டிங் முறைக்கு சாதகமாக இந்த வாடகைத் தாய் சட்டத்தில் குறிப்பிட்ட சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வந்து, திருமணம் செய்து கொள்ளாத செல்வாக்கான தனி நபர்களும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்லி நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைத்திருக்கிறார்.
உச்சநீதிமன்ற நீதிபதியின் பரிந்துரையின் அடிப்படையில் நாடாளு மன்ற நிலைக்குழுவினரின் பெரும்பான்மையைப் பொறுத்து இவ்விவகாரம் இந்திய சொலிஸிட்டர் ஜெனரலின் பரிந்துரைக்காக அனுப்பப் படும். அங்கே மறுப்பு இல்லையென்றால் இனி தாராளமாக இந்தியாவில் திருமணமாகாத செல்வாக்கான தனி நபர்களும் வாடகைத் தாய் சிறப்பு மசோதா கோரும் குறிப்பிடத்தக்க சான்றுகளை சமர்பித்து, வெற்றிகரமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப் படும் எனக் எதிர்பார்க்கப் படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைக்கான காரணம்;
வாடகைத் தாய் மசோதா 2016 ன் படி திருமணமாகாத தனி நபர் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி இல்லை என்பதைப் போலவே, திருமணமாகாத நபர்கள் இந்த முறையால் பலனடையக் கூடாது என்று திட்டவட்டமாக எந்த அனுமதி மறுப்பும் அதில் குறிப்பிடப் படவில்லை. எனவே இந்த விசயத்தில் அனுமதி மறுப்பை விட அனுமதிப்பதே சாலச் சிறந்தது என்றே உச்சநீதிமன்றம் சிங்கிள் பேரண்ட்டிங்க்குக்கு ஆதரவாக இவ்விதம் பரிந்துரைத்திருக்கிறது.
முன்னதாக குழந்தைப் பேறு இல்லாத வெளிநாட்டினர் இந்தியக் குழந்தைகளை தத்தெடுக்க வகை செய்யும் 'ஃபெர்டிலிட்டி டூரிஸம்’ என்று சொல்லப்படக் கூடிய கருவுறுதல் சுற்றுலாவுக்கும் கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. தற்போது தனிநபர் குழந்தைப் பெற்றுக் கொள்ள சட்டத்திருத்தம் மேற்கொள்ளப் படுமாயின் அவ்விசயத்திலும் குறிப்பிடத் தக்க வகையில் நிபந்தனைகள் தளர்த்தப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

