சென்னை கார்ப்பரேஷனின் கோடம்பாக்கம் கிளை அலுவலக ஊழியரான கே. ஜெயந்தி, மே 1 ஆம் தேதி, நடிகர் அஜித்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளையில் தனது சக ஊழியர்களுக்கு கேக் வழங்கினார். சில ஊழியர்கள் அவரது கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டாலும், ஊழியர்களில் ஒருவர் அந்த நிகழ்வுகளை வீடியோப் பதிவாக்கி உயரதிகாரிகளுக்கு புகாராக அனுப்பி வைத்தார். புகாரை ஒட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, விசாரணையின் போது ஜெயந்தி, நடிகர் அஜித்தின் பிறந்தநாளை, தான் பணிபுரிந்த அரசு அலுவலகத்தில், சக ஊழியர்களுடன் கொண்டாடியதை ஒப்புக் கொண்டார். இதனால், ஜெயந்தியின் தவறு நிரூபணமாகி அவருக்கு தண்டனை பரிந்துரைக்கப்பட்டது.