நெருஞ்சில் முள்ளில் உள்ள பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த வேதிப்பொருட்களால், சிறுநீரை பெருக்கும் தன்மையும், இதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும், சிறுநீரக கற்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், இசிவகற்றியாகவும், கிருமிக்கொல்லியாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், அதிகமான கொழுப்பை குறைக்கும் தன்மையும் உடையது. மேலும் இருதயத்தை வன்மைப்படுத்துவதாகவும்,கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது குறிப்பிடத்தக்கது.