கரோனா மூன்றாம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால், நாள்தோறும் லட்சக் கணக்கான மக்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர்.
இதனிடையே கரோனா மூன்றாம் அலை விரைவில் வரும் எனவும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் அறிவுறுத்திவுள்ளனர்.

மேலும், கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சதர் மருத்துவமனையில், குழந்தைகளுக்கென பிரத்யேக கோவிட் வார்டுகளை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வார்டில் உள்ள அறைகளின் சுவற்றில் விலங்குகள் உள்ளிட்டவை வரைந்தும், வார்டுகளுக்கு வெளியே குழந்தைகள் விளையாட பொருள்களும் வைத்துள்ளனர்.

அதேபோல் மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஒரு தன்னார்வலர் அமைப்பு, குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா மையத்தை உருவாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


