தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலியான நிலையில், ஆக்ஸிஜன் ஒதுக்கபட்டும் உரிய நேரத்தில் ஏன் கொடுக்கவில்லை என மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தில்லி முழுவதும் நாள்தோறும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 8 கரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறியது, பிற்பகல் 12 மணிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்துதான் ஆக்ஸிஜன் கிடைத்தது. உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் வராததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டும் உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுக்காதது ஏன் என மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


