மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வறுமையை ஒழித்து சீனா வெற்றி: அதிபர்

வறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

News image

அதிபர் ஷி ஜின்பிங்

Updated On :25 பிப்ரவரி 2021, 11:36 am

வறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த 40ஆண்டுகளாக வறுமையில் பாதிக்கப்பட்டிருந்த 77 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு, வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழுமையான வெற்றியை அடைந்துள்ளது.

இதுகுறித்து அதிபர் ஷி ஜின்பிங் கூறுகையில்,

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், முழுமையாக வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை மக்களும் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், ஐ.நா.வின் வறுமை ஒழிப்பு இலக்கான 2030 காலக்கெடுவைவிட 10 ஆண்டுகளுக்கு முன்னதாக சீனா இலக்கை அடைந்துள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில், தற்போதைய வறுமைக் கோட்டின் கீழ் வாழும், கடைசி 9.89 கோடி கிராமப்புற மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். வறுமை பட்டியலில் இருந்து 832 மாவட்டங்களும் 1,28,000 கிராமங்களும் நீக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டில் இருந்து 77 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதே காலகட்டத்தில் உலகளாவிய வறுமைக் குறைப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சீனா வழங்கியுள்ளது.

இத்தகைய சாதனைகள் மூலம், சீனா மற்றொரு "அதிசயத்தை" உருவாக்கியுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் வறுமை ஒழிப்புக்காக சுமார் 24,600 கோடி அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோட்டின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையிலிருந்து மீட்கப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை உலகளாவிய மொத்தத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.