தில்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணாவை சேர்ந்த விவசாயிகள் கடந்த 135 நாள்களாக தில்லி எல்லைகளில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 11 முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதே கோரிக்கையாக வைக்கப்படுவதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் இன்று கூறியதாவது,
பல விவசாயிகள் சங்கத்தினர், பொருளாதார வல்லுநர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சில விவசாயிகள் மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இதுவரை 11 கட்டப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களில் சிக்கலான பகுதிகளை விவாதித்து, அதில் மாற்றத்தை கொண்டுவர நாங்கள் முன்வந்தோம். ஆனால் விவசாய சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கான காரணத்தையும் கூறவில்லை.
தற்போதைய கரோனா பரவலை கருத்தில் கொண்டு குழந்தைகள் மற்றும் முதியவர்களை வீட்டிற்கு திரும்ப சொல்லி பல முறை விவசாய சங்கத் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். தற்போது கரோனா இரண்டாம் அலை பரவி வருவதை கருத்தில் கொண்டு, நெறிமுறைகளை பின்பற்றி போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். மத்திய அரசுடன் கலந்துரையாட முன்வர வேண்டும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


