சரக்கு ரயில்கள் மூலம் 2020-21 நிதியாண்டில் ரூ. 1.17 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனாவால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதியில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பொருள் ஏற்றுமதியில் சிறிது சரிவு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2019-20 நிதியாண்டைவிட கடந்தாண்டு அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
சரக்கு ரயில்களில் 2020-21 நிதியாண்டில் 12,326 லட்சம் டன்கள் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 1,17,386 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் ரூ. 1,13,897 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரயில்களின் வேகத்தை 24 கி.மீ வேகத்தில் இருந்து 44 கி.மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2020 முதல் 450 வேளாண் ரயில்கள் இயக்கப்பட்டன. அதில், 1.45 லட்சம் விவசாய விளைபொருள்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


