தேனியில் சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்
தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், கரோனா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 60 அரசுத் துறை அதிகாரிகள், 1,952 களப் பணியாளர்கள் மற்றும் 2,800 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் வீடு தேடிச் சென்று கௌரவிக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...