தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

புதுவையில் சுதந்திரதின விழா : முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடி ஏற்றினார்

புதுச்சேரியில், நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றி, சாதனையாளர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

News image
முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடி ஏற்றினார்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில், நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றி, சாதனையாளர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை காலை 9 மணிக்கு வந்தார். அவரை, தலைமை செயலர் அஸ்வனிகுமார், டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா ஆகியோர் வரவேற்றனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில், சரியாக 9:05 மணிக்கு, தேசிய கொடியை முதல்வர் நாராயணசாமி ஏற்றி வைத்தார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.

அதையடுத்து, சுதந்திர தின உரை நிகழ்த்திய முதல்வர், காவல் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள், ரொக்கப் பரிசு வழங்கினார்.

கரோனா பரவலையொட்டி இந்த ஆண்டு பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கோகுலகிருஷ்ணன் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் கொடியேற்றப்பட்டது. பேரவை வளாகத்தில், முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றி வைத்தார். 

முன்னதாக, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். காரைக்காலில் அமைச்சர் ஷாஜகான், ஏனத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கொடியேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.