தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சுதந்திர தின விழா: புதுக்கோட்டையில் ஆட்சியர் உமாமகேஸ்வரி கொடியேற்றினார்

நாட்டின் 74வது சுதந்திர தின விழா புதுக்கோட்டை சேமப்படை திடலில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

News image
காவல் ஆய்வாளர் பரத் சீனிவாஸுக்கு நற்சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

நாட்டின் 74வது சுதந்திர தின விழா புதுக்கோட்டை சேமப்படை திடலில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய 457 அரசுப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவைத் தொடர்ந்து, புதுக்கோட்டை நிஜாம் குடியிருப்பில் வசிக்கும் விடுதலைப் போராட்ட தியாகியின் வாரிசு நாகப்பனின் வீட்டுக்கு நேரில் சென்ற ஆட்சியர், அவரை சிறப்பு செய்து வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல அந்தந்தப் பகுதி கோட்டாட்சியர்கள் அவரவர் பகுதிக்குள்பட்ட 25 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று சிறப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.