நியூஸிலாந்தில் 2 ஆம் அலை : புதிதாக 14 பேருக்கு தொற்று
நியூஸிலாந்தில் கடந்த 102 நாள்களாக சமூகப் பரவல் இல்லாமல் தடுத்து வந்த நிலையில் இந்த வாரத்தில் இரண்டாம் அலை தொடங்கியது. இன்று புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நியூஸிலாந்தில் கடந்த 102 நாள்களாக சமூகப் பரவல் இல்லாமல் தடுத்து வந்த நிலையில் இந்த வாரத்தில் இரண்டாம் அலை தொடங்கியது. இன்று புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து நியூஸிலாந்து திரும்பி கரோனா தனிமைப்படுத்தப்பட்ட விடுதியில் தங்கிருந்த 30 வயது பெண்.
மீதமுள்ள 13 பேர் ஆக்லாந்து நகரத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த காலங்களில் அந்த நகரத்தில் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இந்நிலையில் ஆக்லாந்து நகரத்திற்கு புதன்கிழமை மதியம் முதல் மூன்று நாள்களுக்கு ‘அவசர கால எச்சரிக்கை 3’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 14 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...