ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது: சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

News image
Updated On :12 மே 2018, 8:01 am

புவனேஸ்வர்: வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பாஜக அரசு வீழ்த்தப்படும் எனவும் உறுதி

ஒடிசாவில், 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள திரு. சீதாராம் யெச்சூரி, புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக அல்லாத கட்சிகளின் வாக்குகளை குறிவைப்பதில், அக்கட்சி காட்டிவரும் முனைப்பை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

பாஜக அரசின் கொள்கைகளால், நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகவும் வாழும்நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள யெச்சூரி, ஆளும் பாஜகவுக்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைக்கான பொதுத் தேர்தலில், எந்தவொரு அரசியல் அணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ மார்க்சிஸ்ட் கட்சி இணையாது என திட்டவட்டமாகத் தெரிவித்த யெச்சூரி, அடுத்த பொதுத் தேர்தலில் பாஜகவை அதிகாரத்தில் இருந்து இறக்குவதுதான் நமது பிரதான குறிக்கோள் என்று தெரிவித்தார்.

மேலும், 2019 தேர்தலில், ஒடிசாவில் பிஜு ஜனதாதளக் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டுமா? என்பது குறித்து ஒடிசா மாநிலக்குழு முடிவு எடுக்கும் எனக் குறிப்பிட்டார். 

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு புரிதலை சாத்தியமாக்கிக்கொள்ள வேண்டிய சூழல் ஒடிசாவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு பாஜகவை வீழ்த்துவதுதான் குறிக்கோள் என்ற ஒரே அணுகுமுறைதாரன் காரணம்.

எப்பொழுதும், தேர்தலுக்குப் பின் தான், முரண்பாடுகள் ஏற்படுவதாகவும், தேர்தலுக்கு முன் அல்ல என்பதை வரலாறு உணர்த்துகிறது. 

முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தேர்தலுக்குப் பிறகு 1996-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கி வழிநடத்தினார். அதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், 2004 -ஆம் ஆண்டு தேர்தல்களுக்கு பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கி அதை தலைமையேற்று நடத்தியது இங்குள்ள வரலாறு என கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.