புதுதில்லி: கேரளாவில் கனமழை நீடித்து வருவதால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. வெள்ளம் சூழ்ந்திருப்பதால் கொச்சி விமான நிலையம் 18-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
இன்று காலை ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளால் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. சுற்றுலாத்தலமான மூணாறு பகுதி துண்டிக்கப்பட்டு தீவு போல காணப்படுகிறது.
மின்சாரம், சாலைகள் துண்டிப்பு, தண்டவாளங்களில் நிலச்சரிவு போன்ற இடையூறுகளால் பஸ், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து 23 ஆயிரம் பேர் உள்பட 1 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் அவதிப்படுகின்றனர்.
மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கூடுதல் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கேரளாவுக்கு விரைந்துள்ளனர். குறிப்பாக இடுக்கி, ஆலுவா பகுதிகளில் சென்னை ரெஜிமென்டின் 2 படைப்பிரிவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதைப்போல கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களுக்கும் ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர், ‘இந்த நெருக்கடி நேரத்தில் மத்திய அரசு, கேரள மக்களுடன் உறுதியாக நிற்கும். மாநிலத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று உறுதியளித்தனர்.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராஜ்நாத்சிங் டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் கேரள அரசுக்குத் தேவையான மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் கேரள மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


