பிய்ஜீங்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27ஆம் தேதி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் வாஹூன் நகரில் ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இருதரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தெரிகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இன்று ஞாயிற்றுக்கிழமை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்தும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வெற்றி பெறும் உறுதியாக நம்புகிறோம் என வாங் யீ தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளதாகவும், இந்த சந்திப்பு இரு நாடுகளின் உறவுகளில் ஒரு மைல்கல் என்று நிரூபிக்கும் என்று வாங் கூறினார்.
கடந்த வாரம் திங்கள்கிழமை ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக, ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை பலப்படுத்துவது மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


