பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

திரைப்பட பாணியில் சுரங்கப்பாதை தோண்டி வங்கி லாக்கர்கள் உடைப்பு: ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை!

திரைப்பட பாணியில் நவி மும்பையில் 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி தேசிய வங்கி ஒன்றில் இருந்த 30 லாக்கர்களை

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:07 pm

PTI

மும்பை: திரைப்பட பாணியில் நவி மும்பையில் 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி தேசிய வங்கி ஒன்றில் இருந்த 30 லாக்கர்களை உடைத்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை கும்பல் ஒன்று திருடிச்சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை அருகில் ஜுனிநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நேற்று திங்கள்கிழமை வங்கி திறக்கப்பட்டது. அப்போது அந்த வங்கியின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சில பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. . 

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், வங்கிக்கு அருகில் இருந்த கடையில் இருந்து வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறை வரையில் சுமார் 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியில் உள்ள 225 லாக்கர்களில் 30 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடி அடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் சரியான மதிப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை 

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபராக கருதப்படுபவர் கடந்த மே மாதத்திலிருந்து வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கிருந்துதான் வங்கியின் லாக்கர் அறையை அடைய 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதையை தோண்டி வங்கியில் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. 

கொள்ளை சம்பவம் குறித்து ஐபிசியின் சம்மந்தப்பட்ட பிரிவுகளின் கீழ்  சன்பாடா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என நவி மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

திரைப்பட பாணியில் சுரங்கப்பாதை தோண்டி வங்கி லாங்கர்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.