தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முஸ்தபா டோசா மாரடைப்பால் காலமானார்

1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:18 pm

IANS

மும்பை: 1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

முன்னதாக உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏறப்ட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1993 ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான டோசா, இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருந்தார். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, 2003 முதல் 2010 வரை 7 பேர் கைது செய்யப்பட்டு தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குற்றவியல் சதி மற்றும் கொலை குற்றங்களுக்காக குற்றவாளிகள் என நீதிமன்றம் ஒன்றினால் அறிவிக்கப்பட்டனர். ஏழு பேரில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த குண்டு வெடிப்பு சதிக்கு திட்டம் தீட்டி மற்றும் நிதி செலவு செய்த குற்றவாளி என அறிவிக்கப்பட்ட யாகூப் மேமன் 2015ல் தூக்கிலிடப்பட்டார். முஸ்தபா டோசா  இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.