புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 25) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
விராலிமலை உட்கோட்டம், ராஜாளிபட்டி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ராஜாளிபட்டி, ஜெயமங்கலம், தேன்கனியூா், அத்திப்பள்ளம், பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி, விருதாப்பட்டி, பாட்னாபட்டி, செட்டியபட்டி, செரளபட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதிகள், வேலூா், தொட்டியபட்டி, முல்லையூா், வளதாடிபட்டி, சூரியூா், மதயானைப்பட்டி, திருநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.
கொன்னையூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பொன்னமராவதி பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொன்னமராவதி, புதுப்பட்டி, வலையபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


