நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்கால் கடலோரத்தில் இறந்த நிலையில் ஒதுங்கும்  கடல் ஆமைகள் 

காரைக்கால் கடலோரத்தில் இறந்த நிலையில் கடல் ஆமைகள் கடந்த சில நாள்களாக கரை ஒதுங்கிவருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:52 am

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால் கடலோரத்தில் இறந்த நிலையில் கடல் ஆமைகள் கடந்த சில நாள்களாக கரை ஒதுங்கிவருகிறது.

காரைக்கால் கடற்கரையில் மக்கள் பொழுதுபோக்குக்காக உட்காரும் சுமார் 200 மீட்டர் நீளப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் கடல் அமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கிக்கிடந்தன.   சில ஆமைகள் உயிருடன் கரைக்கு வருவதை பார்க்கும் பள்ளி மாணவர்கள், கடலில் குளிக்க செல்வோர் சிலர், இதனை தூக்கிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் விடுகின்றனர். இருந்தபோதிலும் இவை  கடல் அலையில் மீண்டும் கரைக்கே திரும்பிவந்துவிடுகிறது. 

காரைக்கால் மாவட்டம், கருக்களாச்சேரி கரைப் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட ஆமைகள் திங்கள்கிழமை கரை ஒதுங்கிக் கிடந்தன.  ஆலிவ் ரிட்லி வகையை சேர்ந்த ஆமைகள் என கூறப்படுகிறது. 

பொதுவாக பருவமழை கால முடிவின்போது ஆமைகள் கரைக்கு வந்து, பள்ளம் தோண்டி முட்டையிடுவதும், அடிக்கடி வந்து அதனை பார்த்துச் செல்லுமென கூறப்படுகிறது. இந்த வகையில், இவை கடற்கரைப் பகுதியில் வாழ்விடமாக கொள்ளும்போது, காரைக்கால்  பகுதியில் விசைப்படகுகள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், படகின் கீழ் பகுதியில் அடிபட்டு ஆமை உயிரிழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.

மக்கள் கூடுமிடத்தில் இவைகள் நீண்ட நாள்கள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதால், கடற்கரைக்கு செல்லும் இளைஞர்கள், அதே இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. 

கடலோரத்தில் மீனவ கிராமங்கள், படகுகள் கட்டும் பகுதிகள் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாத கரைப் பகுதியிலேயே ஆமைகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.