2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன்: லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:19 pm

DIN

லண்டன்:  லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வங்கிகளில் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்தில் விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து ,அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே அவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பித்துச் சென்றார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அவர் வசிப்பதாகவும் பின்னர் தெரியவந்தது. எனவே அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடந்த, இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ” நான் என்.ஆர்.ஐ. எனவே என்னை நாடு கடத்த முடியாது . தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும். அல்லது வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்” என அவர் கூறி வந்தார்.

ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத இந்திய வெளியுறத்துறை அமைச்சகம், விஜய் மல்லையாவை கைது செய்வது குறித்து தொடர்ந்து இங்கிலாந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில் இன்று லண்டனில் விஜய் மல்லையா , இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நில மணி நேரங்களிலேயே அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.