/

சிதம்பரத்தில் மாநில கார்காத்த வேளாளர் சங்க 6-வது மாநில மாநாடு இன்று தொடக்கம்

சிதம்பரம் மாநில கார்காத்த வேளாளர் சங்க 6-வது மாநில மாநாடு சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் பிப்.27-ம் தேதி சனிக்கிழமை இன்று காலை தொடங்கி இரு தினங்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:38 pm

ஜி. சுந்தர் ராஜன்

சிதம்பரம் மாநில கார்காத்த வேளாளர் சங்க 6-வது மாநில மாநாடு சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் பிப்.27-ம் தேதி சனிக்கிழமை இன்று காலை தொடங்கி இரு தினங்கள் நடைபெறுகிறது.

மாநாட்டை முன்னிட்டு சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில்ல பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. 15-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் மற்றும் அனைத்து விடுதிகளில் வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெறும் மாநாட்டில் வேலைவாய்ப்பு முகாம், விவசாய கருத்தரங்கம், மனமக்கள் பதிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறு. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கே.கே.ஆர்.கே.சுரேஷ் தலைமை வகிக்கிறார். கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எஸ்.ஞானதேசிகன், ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் வெங்கடேசம்பிள்ளை, கவிஞர் விவேக் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

மாநாட்டு ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் ஆர்.கே.சிவக்குமார் பிள்ளை, நகரத் தலைவர் என்.முருகன் பிள்ளை, வையூர் தியாகராஜன் உள்ளிட்டோர் கொண்டு விழாக்குழுவினர் செய்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.