தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருந்த பாஜக, இப்போது வாயை திறந்துள்ளது: மாயாவதி

வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கத்திலேயே பிரதமர் மோடி தலித் பிரச்னைகளை பற்றி பேசுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2016, 8:50 am

புது தில்லி: வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கத்திலேயே பிரதமர் மோடி தலித் பிரச்னைகளை பற்றி பேசுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருந்த பாஜக, இப்போது கண்விழித்து வாயை திறந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதே ஆகும்.

தலித்-களின் ஓட்டுகளைப் பெறுவதே மோடியின் முக்கிய நோக்கமாகும். இதனால் தான் கடந்த 2 ஆண்டுகளாகத் தலித் பிரச்னை குறித்து வாயைத் திறக்காத மோடி, தெலங்கானாவுக்கு முதன் முறையாக வந்து, ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்றும்,

பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பவர்களையும் நாம் இனம் கண்டுகொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் பேசி மக்களை திசை திருப்ப பார்கின்றார் மோடி என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.