கூவாகம் சித்திரைப் பெருவிழா இன்று தொடக்கம்
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்வர் கோயில் சித்திரைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிறது.


உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்வர் கோயில் சித்திரைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிறது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் பிரசிதிப் பெற்ற கூத்தாண்வர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறும். இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொள்வர்.
செவ்வாய்க்கிழமை காலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் நிகழாண்டு திருவிழா தொடங்குகிறது. இதைதொடர்ந்து 6-ஆம் தேதி பந்தலடி எம்.தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் மாலையில் தாலிகட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ஆம் தேதி சாமிக்கு கண் திறக்கும் நிழ்ச்சி நடைபெறும். அன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
வரும் 22-ஆம் தேதி வரை 18 நாள்கள் இந்தப் பெருவிழா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...