நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்கால் அருகே மதுக்கடையில் நடந்த தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

காரைக்கால் அருகே மதுக்கடையில் நடந்த தகராறில் குடிக்க வந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:56 am

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால் அருகே மதுக்கடையில் நடந்த தகராறில் குடிக்க வந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

காரைக்கால் அருகே பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள ஒரு சாராயக்கடையில் சனிக்கிழமை இரவு மேலகாசாக்குடி பகுதி தென்பாதியை சேர்ந்த சந்திரமோகன் (48) என்பவர் சாராயம் குடிக்க வந்துள்ளார்.

நாகை மாவட்டம் தேவூரை சேர்ந்த புண்ணியமூர்த்தி (55) என்பவர் பாட்டில் எடுக்கும் பணியில் இக்கடையில் வேலை செய்துவருகிறார். சாராயம் குடித்தவர்கள் இடத்தில் கிடந்த பாட்டிலை எடுத்துக்கொண்டிருக்கும்போது, சந்திரமோகனுக்கும், புண்ணியமூர்த்திக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை கடையில் உள்ள மற்ற பணியாளர்கள் தடுத்து சமரசம் செய்துள்ளனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் விறகு கட்டையை எடுத்துவந்து சந்திரமோகனை புண்ணியமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சந்திரமோகனை, கடை நிர்வாகத்தினர் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்தபோது, இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சந்திரமோகனுக்கு மனைவி, 2 மகள், 1 மகன் உள்ளனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸôர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.