ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை இரவு சூராவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு கிராமங்கள் வியாழக்கிழமை காலை வரை மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அதனால் விண்ணமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. விண்ணமங்கலம், கன்னடிகுப்பம், நாச்சார்குப்பம், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், காட்டுக் கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிóல புதன்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தை சேர்ந்த மின்சார வாரிய பணியாளர்கள் மழை நேரத்திலும் பல இடங்களுக்கு சென்று பழுதை சரிசெய்ய முயன்றனர். மின் கம்பத்தில் மழை நேரத்தில் ஏறியபோது வழுக்கியதாலும், இருட்டாக இருந்ததாலும் அவர்களால் பழுதை சரிசெய்ய முடியவில்லை. அதனால் இரவு முழுவதும் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கி கிடந்தன.
வியாழக்கிழமை காலையிலேயே மின்சார வாரிய பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டனர். பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பழுதை கண்டுபிடித்து சரிசெய்தனர். பிறகு மின்தடை நீங்கியது.
இதுகுறித்து விண்ணமங்கலம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் கூறியது, மழை நேரமாக இருந்ததாலும், இருளாக இருந்ததாலும் மின் பழுதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. ஆனால் வியாழக்கிழமை காலையிலேயே விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

