வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குடிநீர் கேட்டு துத்திப்பட்டு கிராமத்தில் சாலை மறியல்:  போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On :25 மே 2015, 9:57 am

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையாம்.  இதுகுறித்து பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படவில்லை.

ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் ஷூ மற்றும் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் அமைந்திருப்பதால் அச்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.  மேலும் பேர்ணாம்பட்டுக்கும் அதிக எண்ணிக்கையில் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலை மறியல் காரணமாக இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.  மேலும் ஷூ மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் வாகனங்கள், தொழிற்சாலை பஸ்கள் என அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உமர்ஆபாத் போலீஸார், ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா ஆகியோர் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.   ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.    சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.